Aamras Dosa (Photo Credit: Instagram)

ஜூன் 12, அகமதாபாத் (Trending Video): இந்திய வகை உணவுகளுக்கு என சர்வதேச அளவில் மதிப்பு உள்ளது. வெளிநாட்டவரும் நமது உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டு மகிழ்வார்கள். நமது உணவு வகையில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளும், காய்கறிகளும் உடலுக்கு நன்மை தருபவை.

இன்றளவில் மேலை நாட்டு உணவுகளுடன் நமது உள்ளூர் உணவுகளும் போட்டிபோட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவை நமது ஊர் வழக்கத்திற்கேற்ப பொருட்களை சேர்த்தும் அதே பெயரில் தயாரிக்கப்படுகிறது. Bus Accident: அதிவேகமாக வளைவில் திரும்பியதால் சோகம்; பேருந்து கவிழ்ந்து திருமண வீட்டார் 10 பேர் பலி, 20 பேர் படுகாயம்..!

இந்த நிலையில், வடமாநிலங்களில் பிரதானமாக விற்பனை செய்யப்படும் மாம்பழ வகை உணவுகளால், தற்போது சாலையோர உணவகத்தில் ஒருவர் மாம்பழ தோசை சுடுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் மாம்பழ தோசை செய்யப்படுகிறது. வடமாநிலங்களில் ஆம்ரஸ் (Aamras) என்ற மாம்பழ வகை உணவு பிரபலம் ஆகும். வடமொழியில் ஆம் என்றால் மாம்பழம் என பொருள்படும். மாம்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் உணவு ஆம்ரஸ்.