ஜூலை 08, ஹைதராபாத் (Telangana News): நம் வீட்டில் சமைக்கப்படும் உணவுகளைப் போல வெளியில் சாப்பிடும் அனைத்து உணவுகளும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு தான் சாப்பிடுகிறோம். ஆனால் சமீப காலமாக உணவுப் பொருட்களில் எதிர்பாராத அதிர்ச்சி தரும் பொருட்கள், புழு, பூரான், எலி என கண்டுபிடிக்கப்படுவது வேதனை அளிக்கும் ஒன்றாக உள்ளது.
சமீபத்தில், லேஸ் பாக்கெட்டுகளில் கரப்பான் பூச்சி கண்டறியப்பட்டது. வேஃபர்ஸ் பாக்கெட்டில் ஒரு பொரித்த தவளை கண்டறியப்பட்டது. மேலும் ஒரு குடும்பத்தினர் வாங்கிய ஹேர்ஷேஸ் சாக்லேட் சிரப் பாட்டிலில் இறந்த எலியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி மலாட்டைச் சேர்ந்த 26 வயது மருத்துவர், ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித கட்டைவிரலைக் கண்டுபிடித்தார். TN Weather Update: இன்றைய மற்றும் நாளைய வானிலை குறித்த அறிவிப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. விபரம் உள்ளே..!
அந்தவகையில் தற்போது ஹைதராபாத்தில் உள்ள கட்டி அன்னாரும் ராகவண்ணா ஹோட்டலில் கொடுக்கப்பட்ட பூரி மசாலில் இறந்த புழு இருந்ததுள்ளது. தகவல் அறிந்து காவல் துறையினரும் நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். சுகாதாரத்துறை அதிகாரிகளும் உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
పూరి కూరలో వచ్చిన పురుగు.. కంగుతిన్న కస్టమర్
హైదరాబాద్ - గడ్డి అన్నారం రాఘవేంద్ర హోటల్లో పూరి ఆర్డర్ ఇవ్వగా దాంట్లో పూరి కూరలో ప్రత్యక్షమైన పురుగు.. కస్టమర్ అడిగినా పట్టించుకోని హోటల్ యజమాని. pic.twitter.com/jKIOnQ2Zk0— Telugu Scribe (@TeluguScribe) July 8, 2024