மே 31, தூத்துக்குடி (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி (Sekarakudy) அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் குடிநீர் பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால் அப்பகுதி மக்கள் ஊரைவிட்டு முழுவதுமாக வெளியேறினர். கடந்த 20 ஆண்டுகளாக கந்தசாமி என்பவர் மட்டும் ஒற்றை ஆளாக வசித்த நிலையில் அவரும் சில தினங்களுக்கு முன்பு இறந்துபோனார். ஊரை காலி செய்துவிட்டு சென்ற மக்கள் மீண்டும் ஊருக்கு வர வேண்டும், ஊர் செழிக்க வேண்டும் என்ற ஆசையோடு ஆவர் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரது ஆசை நிறைவேறாமலேயே அவர் இயற்கை எய்தியுள்ளார். Electric Pole In Critical Condition: ஆபத்தான நிலையில் மின் கம்பம்.. அச்சத்தில் மக்கள்.. சரி செய்ய கோரிக்கை..!
இவரது இறப்பு, இந்த ஊரை பூர்விகமாக கொண்ட இளைஞர்களுக்கு, அவர்களது அப்பா, தாத்தா வாழ்ந்த ஊரை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மேலும் இந்த கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் மீண்டும் குடியேற தயார் என இங்கு வாழ்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆளில்லாமல் காலியான கிராமம்.. #TamilNews pic.twitter.com/vyvaykhQxh
— Backiya (@backiya28) May 31, 2024