Thanjavur Bus Accident (Photo Credit: @aramnewstamil X)

ஜூலை 31, அய்யம்பேட்டை (Thanjavur News): தஞ்சாவூர் (Tanjore Accident) மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை, வயலூர் பகுதியில் இன்று காலை நடந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்ட பேருந்து பயணிகள் காயமடைந்த சோகம் நடந்துள்ளது. கும்பகோணம் நோக்கி பயணம் செய்த பிஎன்ஏ என்ற தனியார் பேருந்தும் - தஞ்சாவூர் நோக்கி பயணம் செய்த லிங்கன் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது. Mettur Dam: நீர்வரத்து தொடர் அதிகரிப்பு; மேட்டூர் அணையில் இருந்து 1 இலட்சம் கன அடி நீர் வெளியேற்றம்.! 

20 பயணிகள் காயம்:

இரண்டு வாகனங்களும் எதிரெதிர் திசையில் பயணம் செய்த நிலையில், லிங்கன் பேருந்தின் ஓட்டுநர் செல்போனில் பேசியவாறு வாகனத்தை இயக்கி இருக்கிறார். அச்சமயம், எதிர்திசையில் வந்த பேருந்தை கவனிக்காமல் பயணித்த நிலையில், பிஎன்ஏ பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் சோகம்:

விபத்தைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், உடனடியாக விரைந்து சென்று பயணிகளை மீட்டனர். பின் அவசர ஊர்தி மற்றும் அங்கிருந்த வாகனங்கள் உதவியுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். தனியார் பேருந்து ஓட்டுனர்கள் அதிவேகத்தில் அலட்சியமாக வாகனங்களை இயக்குவது தமிழகமெங்கும் தொடர்கதையாகிறது. அவ்வப்போது இவ்வாறான விபத்துகளும் நடைபெறுகிறது. ஒருசில நேரம் கோர விபத்துகள் விலைமதிப்பில்லாத உயிர்களையும் காவு வாங்குகிறது.