செப்டம்பர் 30, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தில் 25 வயது வாலிபர் ஒருவர் சிறுவனை கடத்திய (Kidnapping Boy) சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவை சேர்ந்தவர் ஜீவன் ஜோதி தேவி. இவர் வீட்டில் இருக்கும் பொழுது திடீரென வாலிபர் ஒருவர் மழையை காரணம் காட்டி சிறிது நேரம் இங்கு இருக்கின்றேன் என்று கேட்டுள்ளார். இவரும் சரி என்று அனுமதித்துள்ளார். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த வாலிபரையும் தன்னுடைய குழந்தையும் காணவில்லை என்பதனை உணர்ந்த அவர் குழந்தையினை தேட ஆரம்பித்துள்ளார். Kolkata Tram End of Era: முடிவுக்கு வருகிறது கொல்கத்தாவின் சகாப்தம்; டிராம் சேவைக்கு முடிவுகட்டியது மேற்குவங்க அரசு.!
எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததினால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டத்தில் அந்த வாலிபரையும் சிறுவனையும் 48 மணி நேரத்தில் உத்திரப்பிரதேசத்தில் கண்டுபிடித்தனர். இச்சம்பவம் குறித்து விசாரித்ததில் அந்த வாலிபர் யூபிஎஸ்சி தேர்விற்கு படிப்பதற்கு பயிற்சி வகுப்பில் (UPSC coaching lessons) சேர பணம் தேவைப்பட்டதினால் அந்த சிறுவனை கடத்தினேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும் குழந்தையை கடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.