ஜூன் 01, (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத், பெகும்பேட் இரயில் (Begumpet Railway Station) நிலையத்தில், இரயில்வே காவல் அதிகாரியாக பணியாற்றி வரும் பெண்மணி கே. சாந்தி.
சம்பவத்தன்று (31-05-2023) இவர் வழக்கம்போல இரயில் நிலையத்தில் (Railway Protection Force RPF) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது, உள்ளூர் இரயிலில் பயணம் செய்ய பெண்மணி ஒருவர் முற்பட்டார். LPG Rates Slashed: சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை அதிரடி குறைப்பு; மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!
இரயில் நகரும் போது பெண்மணி இரயிலில் பயணிக்க முற்பட, அதனால் அவர் இரயிலுக்கும் - தண்டவாளத்திற்கும் இடையே சிக்கிக்கொள்ள நேரிட்டது.
இதனைக்கண்டு நொடியில் துரிதமாக செயல்பட்ட காவல் அதிகாரி சாந்தி, பெண்ணை பத்திரமாக நடைமேடையில் மீட்டர். இந்த காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியுள்ளது.
ஓடும் இரயிலில் ஏறுவதோ இறங்குவதோ தவறானது. பயணத்திற்கு முற்பட்டால் அரைமணிநேரம் முன்பு வந்து காத்திருப்பதில் தவறில்லை. நமது அவசரத்திற்கு இயந்திரங்கள் செயல்பாடுகளை கயிறு வைத்து கட்ட இயலாது என்பதை நினைவில் கொள்ள வரவேண்டும்.
#WATCH | Secunderabad, Telangana: An RPF (Railway Protection Force) woman constable saves the life of a woman passenger
K. Sanitha, an RPF constable saved a passenger from falling into the gap between the platform and the train, at Begumpet Railway station: RPF (31/05)
(CCTV… pic.twitter.com/J9bRenF3Vv
— ANI (@ANI) May 31, 2023