மே 15, புதுடெல்லி (New Delhi): சமூக வலைதளங்களின் பாதுகாப்பை அதிகரித்து வந்தாலும், முன்பின் தெரியாதவர்களுடன் பழகும் போது, பல வித அனுபவங்களைப் பெற்றாலும் கூட அதிலும் ஆபத்துகளும் நிறைந்தே இருக்கின்றது. சமீபத்தில் கோரா தளத்தில் ஒருவர், பிரபலமான டேட்டிங் ஆப்-ஐ குறித்து இதற்கு முன் இந்தியாவில் இத்தளத்தில் யாரிடமாவது ஏமாந்து உள்ளீர்களா என கேள்வியை பதிவிட்டுள்ளார். அதற்கு ஒரு பெண் அளித்திருந்த பதில் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
“பணம் குறித்து ஏமாந்தது இல்லை. ஆனால் இதுவும் ஒருவகை ஏமாற்றம் தான். எனது நெருங்கிய தோழியின் தோழி, இந்த டேட்டிங் ஆப்-ஐ பயன்படுத்திவந்தார். அதில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு டேட்-க்கு சென்றார். இருவரும் அன்று மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். அதன் பிறகு அந்த தோழியின் பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட மருத்துவரை அணுகி விசாரித்தார். அதில் அவருக்கு அந்த இடத்தில் வினோதமான புழு உருவாகி இருப்பதைக் கண்டறித்தார். பின்னர் அது இறந்த பிணங்களில் மட்டும் உருவாகும் ஒருவகை புழு என்பது தெரியவந்தது. இது டேட் சென்றவருடன் நெருக்கமாக இருந்த காரணத்தால் வந்தது மருத்துவசோதனையில் கண்டறியப்பட்டது. Best Budget Apps: பட்ஜெட் போட்டு வாழ சிறந்த ஆப்.. உடனே இன்ஸ்டால் பண்ணுங்க..!
அந்த தோழி இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். விசாரணையில், அந்த நபரின் வீட்டிலிருந்து நெடுநாட்களான வைத்திருந்த ஒரு பெண்ணின் பிணம் கண்டறியப்பட்டது.” எனப் பதிலளித்திருந்தார். 2கே, ஜென் ஜி, தலைமுறைகளுக்கு பிரபலமாகவும் சாதாரணமாகவும் பயன்படுத்தும் டேட்டிங் ஆப்கள் அதிகரித்து வருகிறது. டேட்டிங் ஆப்-கள் பயன்படுத்தும் போது எப்போதும் பாதுகாப்பாகவும் கவனத்துடனும் இருப்பது அவசியம் என்பதை நினைவில் கொண்டு பயன்படுத்துங்கள்.
When a date turns into a Horror Movie pic.twitter.com/M8AjsaLwof— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) May 15, 2024