ஏப்ரல் 02, சென்னை (Chennai): குக் வித் கோமாளி (CWC) என்ற டிவி நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவு பிரபலமான நடிகர் பாலா (KPY Bala) தற்போது சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் இவர் பெண் ஒருவருக்கு ஆட்டோ வாங்கி கொடுப்பதாக இருக்கிறது. அதாவது இவரும் நடிகர் லாரன்ஸ் சேர்ந்து கஷ்டப்படும் ஏழை பெண்ணிற்கு ஆட்டோவை வாங்கி கொடுத்துள்ளனர். இது குறித்து பாலா பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்ட இந்த பெண் பெயர் முருகம்மாள் என்றும், இவர் சென்னையில் உள்ள எலெக்ட்ரிக் ரயிலில் சமோசா விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாகவும், இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருப்பதாகவும், சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் தவறிவிட்டதாகவும், தற்போது இவர் தனியாக உழைத்து மூன்று பெண்களையும் வளர்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். TN Weather Report: தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)