செப்டம்பர் 26, மீரட் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் பாலியல் தொல்லை (Sexual Abuse) கொடுத்த வாலிபரை, இளம்பெண் கன்னத்தில் அறைந்தார். மீரட்டில் உள்ள சாகேத் சதுக்கத்தில் இ-ரிக்ஷாவில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, ​​கோபமடைந்த இளம்பெண் 5 முறை அந்த நபரை கன்னத்தில் அறைந்துள்ளார். சிறிது நேரத்தில், அங்கு மக்கள் கூட்டம் கூடி, பாலியல் வன்கொடுமை செய்தவரை பிடித்து, மீரட் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். தற்போது, இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இளம்பெண்ணின் துணிச்சலை மக்கள் பாராட்டி வருகின்றனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. PM Modi to Launch BSNL 4G: நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை அறிமுகம்.. பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்..!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)