செப்டம்பர் 10, மீரட் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மீரட் (Meerut) நகரின் டிபி நகர் காவல்நிலையப் பகுதியின் நை பஸ்தி காலனியில் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு பிஏ படிக்கும் கல்லூரி மாணவியை பொது இடத்தில் பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்த குற்றவாளிக்கு பொதுமக்கள் அடி, உதை கொடுத்தனர். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. பாதிக்கப்பட்ட மாணவி கூச்சலிட்டு, துணிச்சலாக அவரை எதிர்கொண்டார். உடனே, அங்கிருந்த பொதுமக்கள் வாலிபரை மடக்கி பிடித்து, சம்பவ இடத்திலேயே சரமாரியாக தாக்கினர். பின்னர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Shocking Video: எலுமிச்சையில் வழுக்கி கரப்பான் பூச்சு போல கவிழ்ந்த மகேந்திரா தார்.. பூஜையால் போர்க்களமான ஷோரூம்.!
வீடியோ இதோ:
UP क़े मेरठ शहर क़े TP नगर थाना क्षेत्र की नई बस्ती कॉलोनी में छेड़छाड़ की घटना सामने आई है।#viralvideo
BA की छात्रा के साथ सरेआम छेड़छाड़ करने वाले मनचले को जनता ने ऐसा सबक सिखाया कि वीडियो सोशल मीडिया पर वायरल हो गया। छात्रा ने साहस दिखाते हुए शोर मचाया, पब्लिक को इकट्ठा किया… pic.twitter.com/5zUankWh3e
— TRUE STORY (@TrueStoryUP) September 10, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)