ஜூலை 09, கோரக்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூரில் (Gorakhpur) ஒரு பெண் தனது 78 வயது மாமியாரை கொடூரமாக தாக்குவது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தில், வயதான பெண்ணின் முகம் மற்றும் கண்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. கான்ட் காவல்நிலையப் பகுதியில் கடந்த ஜூன் 28ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின்னர், பாதிக்கப்பட்டவரின் கணவர் தினேஷ் சந்திர ஜெய்ஸ்வாலின் புகாரின்பேரில், நிஹாரிகா என்ற அவரது மருமகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி கைது.. போலீஸ் விசாரணை..!
வீடியோ இதோ:
सास को बहु ने पीटा,वीडियो सोशल मीडिया पर वायरल!
गोरखपुर कैंट थाना क्षेत्र में बहु ने 78 वर्षीय सास को पीटा सास के चेहरे और आंख पर गंभीर चोटें pic.twitter.com/Id7moJdDhU
— Priya singh (@priyarajputlive) July 9, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)