ஜூன் 16, ஹர்தோய் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், ஹர்தோய் (Hardoi) மாவட்டத்தில் உள்ள பில்கிராம் நகரில் ஒரு பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. அங்கு காரில் வந்த குடும்பத்தினர், காரில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டிருந்தனர். அப்போது, பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஊழியருடன் அந்த குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதில், ஒரு இளம்பெண் ஊழியரை நோக்கி துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், அங்கு  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் சிலர் அப்பெண்ணைத் தடுத்து நிறுத்தினர். அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 37 கிலோ கஞ்சா பறிமுதல்.. 2 இளம்பெண்கள் கைது..!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)