
ஜூன் 16, திருவனந்தபுரம் (Kerala News): சமீப காலமாகவே தென் மாநிலங்களில் கஞ்சா (Cannabis) உட்பட போதைப் பொருட்களின் புழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு பிற மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்காக ரயில்வே காவல்துறையினர் மற்றும் கலால் துறையினர், போதைப் பொருள் தடுப்புத் துறையினர் ஆகியோர் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 23 வயது மாடல் அழகி கழுத்தறுத்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
கஞ்சா கடத்தல்:
இந்நிலையில், நேற்று (ஜூன் 15) கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் இருந்து கேரளா வரும் ரயிலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக பாலக்காடு மற்றும் எர்ணாகுளம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. தகவலின்பேரில், பாலக்காட்டில் ரயில்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். மேலும், எர்ணாகுளம் வடக்கு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புத் துறையினர் தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பெங்களூரு ரயிலில் இருந்து வந்த 2 இளம்பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இளம்பெண்கள் கைது:
அவர்களிடம் இருந்த 2 பெரிய பேக்கை பரிசோதித்தபோது, அதில் 37 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, சம்மந்தபட்ட 2 பேரையும் கைது செய்தனர். இதில், அவர்கள் மேற்குவங்க மாநிலம், முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த காதூன் பீவி (வயது 29), சுல்தானா (வயது 21) என்பது தெரியவந்தது. இதுகுறித்த விசாரணையில், இவர்கள் 2 பேரும் கேரளாவுக்கு சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு பலமுறை கஞ்சா கடத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.