ஏப்ரல் 05, காஞ்சிபுரம் (Kancheepuram): 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் (Lok Sabha election) ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள, சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நாடாளுமன்ற பொது தேர்தலையொட்டி 100% வாக்களிப்பதை வலியுறுத்தி (100% voting) பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அவர்கள் தொடங்கி வைத்தார். அப்போது அவர் உடன் வருவாய் கோட்டாட்சியர் சரவணன் கண்ணன், அரசு அலுவலர்கள் ஏராளமானோர் இருந்தனர். TN Weather Report: கடலோர மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)