Rain (Photo Credit: Pexels)

ஏப்ரல் 05, சென்னை (Chennai): இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது ஏனைய தமிழக மாவட்டங்கள், பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 7 ஆம் தேதியன்று கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (The Indian Meteorological Department) அறிக்கை வெளியிட்டுள்ளது. Joker 2 Trailer Release Date: மீண்டும் சமுதாயத்தின் மீது கோபமாக வருகின்றான் ஜோக்கர்.. ஜோக்கர் படத்தின் ட்ரைலர் வெளியீடு..!

மேலும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.எனவே இன்று மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.