ஜனவரி 27, விஜ்க் ஆன் ஜீ (Sports News): நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் செஸ் 87வது சீசன் நடைபெற்று வருகிறது. டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் (Tata Steel Chess) தொடரில் இந்தியாவின் குகேஷ் 3வது வெற்றியை பதிவு செய்தார். பிரிவு 7வது சுற்றில், நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ், சகவீரர் ஹரிகிருஷ்ணாவை மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 45வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இது, குகேஷின் 3வது வெற்றியானது. நேற்று நடைபெற்ற 8வது சுற்றின் முடிவில், போட்டி டிரா ஆனது. இதன் முடிவில் புள்ளிப்பட்டியலில், நோதிர்பெக், குகேஷ் (GM Gukesh) மற்றும் பிரக்ஞானந்தா (R Praggnanandhaa) அனைவரும் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டனர். IND Vs ENG 3rd T20i Match: இந்தியா - இங்கிலாந்து டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? எதிர்பார்ப்பில் மூன்றாவது டி20 ஆட்டம்.! நேரலையில் பார்க்க விபரம் உள்ளே.!
டாடா ஸ்டீல் செஸ் 2025 புள்ளிப்பட்டியல்:
Same players at the top, less rounds to play! 👀 pic.twitter.com/GW3HBmDZlH
— Chess.com (@chesscom) January 26, 2025
டிராவில் முடிந்த குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா ஆட்டம்:
Praggnanandaa spent a minute before playing 1.e4 — Gukesh chose the Berlin and Pragg went for the Anti-Berlin with 4.d3!#TataSteelChess pic.twitter.com/uUBTAVTUBL
— chess24 (@chess24com) January 26, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)