ஜூன் 26, சென்னை (Trending Video): சமூக வலைதளபக்கத்தில் வீடியோ வெளியிடும் பிரபலங்கள் தங்களது செயல்பாடுகளில் உள்ள எல்லை மீறிய செயலை ஒரு சிலநேரம் கவனிக்காமல் வீடியோ பதிவிட்டு, பின் சர்ச்சையில் சிக்குவார்கள். அந்த வகையில் ஒரு காலத்தில் மிகப்பெரிய அளவில் போற்றப்பட்ட யுடியூபர் இர்பான் சமீபத்தில் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியிருந்தார். இதனிடையே தனது விலை உயர்ந்த காஸ்ட்லி பைக்கை கழுவுவதற்கு வழியில் செல்பவர்களை அழைத்து தண்ணீர் கேட்ட இளைஞரின் செயல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து இளைஞரும் அந்த விஷயத்திற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நிலையில், தற்போது அவர் முதலில் பதிவிட்ட வீடியோ காட்சிகள் கத்தரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் மீண்டும் பகிரப்பட்டுள்ளதால் இளைஞருக்கு அதிகளவு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இளைஞரின் மரியாதை குறைவற்ற செயல் என வலம் வரும் வீடியோ:

இளைஞர் 2 மாதத்திற்கு முன் மன்னிப்பு கேட்ட வீடியோ :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)