LKK Vs SMP 2nd Batting (Photo Credit: @TNPremierLeague X)

ஜூன் 11, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. LKK Vs SMP: ஷாருக்கான் அதிரடி அரைசதம்.. மதுரை வெற்றி பெற 170 ரன்கள் இலக்கு..!

லைகா கோவை கிங்ஸ் எதிர் சீசெம் மதுரை பாந்தர்ஸ் (Lyca Kovai Kings Vs Siechem Madurai Panthers):

இந்நிலையில், இன்று (ஜூன் 11) லைகா கோவை கிங்ஸ் எதிர் சீசெம் மதுரை பாந்தர்ஸ் (LKK Vs SMP, Match 8) அணிகள் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற மதுரை அணியின் கேப்டன் என்எஸ் சதுர்வேத் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய கோவை அணிக்கு ஜிதேந்திர குமார் 17, சுரேஷ் லோகேஷ்வர் 20 ரன்னில் அவுட்டானர். அடுத்து வந்த சச்சின் 15 ரன்னிலும், ஆன்ட்ரே சித்தார்த் 20 ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாதவ பிரசாத் 4 ரன்னில் ரன் அவுட்டானார். கேப்டன் ஷாருக்கான் மட்டும் தனியாளாக போராடி 44 பந்தில் 77* ரன்கள் அடித்தார். இதன்மூலம் கோவை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 169 ரன்கள் அடித்தது.

மதுரை அபார வெற்றி:

இதனையடுத்து, மதுரை அணி 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. தொடக்க வீரர் அனிரூத் அதிரடியாக விளையாடி 37, ராம் அரவிந்த் 64 ரன்னிலும் அவுட்டானர். கேப்டன் என்எஸ் சதுர்வேத் 23 பந்தில் 46* ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். மதுரை அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் அடித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.