CSG Vs NRK 2nd Batting (Photo Credit: @TNPremierLeague X)

ஜூன் 09, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இந்நிலையில், இன்று (ஜூன் 09) சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் நெல்லை ராயல் கிங்ஸ் (CSG Vs NRK, Match 6) அணிகள் மோதின. CSG Vs NRK: சேப்பாக் அணி அதிரடி ஆட்டம்.. நெல்லை வெற்றி பெற 213 ரன்கள் இமாலய இலக்கு..!

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் நெல்லை ராயல் கிங்ஸ் (Chepauk Super Gillies Vs Nellai Royal Kings):

இப்போட்டியில், டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய சேப்பாக் அணிக்கு கே ஆஷிக் 54, கேப்டன் பாபா அபராஜித் 41, ஸ்வப்னில் சிங் 45 மற்றும் விஜய் சங்கர் 47 ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 212 ரன்கள் அடித்துள்ளது. நெல்லை அணி சார்பில் அதிகபட்சமாக வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

சேப்பாக் அபார வெற்றி:

இதனையடுத்து, நெல்லை அணி 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற நெல்லை அணி தடுமாறியது. கேப்டன் அருண் கார்த்திக் 42 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அவுட்டானார். இறுதியில், அதிரடியாக விளையாடிய அத்னான் கான் 27 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். இருப்பினும், நெல்லை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம், சேப்பாக் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.