CSG Vs DD Qualifier 2, Toss (Photo Credit: @TNPremierLeague X)

ஜூலை 04, திண்டுக்கல் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி தொடங்கியது. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் சேலத்திலும், 3வது சுற்று லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியிலும் நடைபெற்று முடிந்தன. நடப்பு தொடரில், 28 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. இப்போட்டிகள், அனைத்தும் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. CSG Vs DD Qualifier 2: குவாலிபயர் 2.. நாளை சேப்பாக் - திண்டுக்கல் அணிகள் பலப்பரீட்சை..!

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் திண்டுக்கல் டிராகன்ஸ் (Chepauk Super Gillies Vs Dindigul Dragons):

இந்நிலையில், முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்த சேப்பாக் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணியை 2வது தகுதி சுற்றுப்போட்டியில் இன்று (ஜூலை 04) எதிர்கொள்கிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் (CSG Vs DD) அணிகள் 2வது தகுதி சுற்றுப் போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில், வெற்றி பெறும் அணி இறுதிபோட்டியில் திருப்பூர் அணியை எதிர்கொள்ளும். இவ்விரு அணிகளும் இதுவரை 12 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், சேப்பாக் அணி 8 போட்டியிலும், திண்டுக்கல் அணி 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

நேரலை விவரம்:

அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சி (TNPL Live Watching) மற்றும் ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (பிளேயிங் லெவன்):

கே ஆஷிக், ஆர்எஸ் மோகித் ஹரிஹரன், பாபா அபராஜித் (கேப்டன்), விஜய் சங்கர், என் ஜெகதீசன், ஸ்வப்னில் சிங், எஸ் தினேஷ் ராஜ், அபிஷேக் தன்வார், லோகேஷ் ராஜ், ஜே பிரேம் குமார், எம் சிலம்பரசன்.

திண்டுக்கல் டிராகன்ஸ் (பிளேயிங் லெவன்):

ரவிச்சந்திரன் அஷ்வின் (கேப்டன்), பாபா இந்திரஜித், விமல் குமார், தினேஷ், ஹன்னி சன்னி, மான் பாஃப்னா, புவனேஸ்வர், எம் கார்த்திக் சரண், வருண் சக்கரவர்த்தி, சசிதரன் ஆர், கணேசன் பெரியசாமி.