அக்டோபர் 28, அல் அம்ராத் (Sports News): வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2024 (ACC Men's T20 Emerging Teams Asia Cup 2024) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் (Oman) நடைபெற்றது. இதில் பங்கேற்ற 8 அணிகளில் இருந்து குரூப் ஏ-வில் இருந்து இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணியும், குரூப் பி-யில் இருந்து இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ அணியும் அரையிறுதிக்கு தகுதிபெற்றது. இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணியும், இந்தியா ஏ அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஏ அணியும் (SL A Vs AFG A, Final) இறுதிப்போட்டிக்கு முன்னேறின. IND Vs NZ: வெற்றிக்கோப்பையுடன் தோனி.. 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த சுவாரசியம்.. மறக்க முடியுமா?..
இந்நிலையில், இறுதிப்போட்டி நேற்று அல் அம்ராத்தில் (Al Amerat) நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. அதில், அதிகபட்சமாக சஹன் ஆராசிகே (Sahan Arachchige) 64 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதுடன், எமர்ஜிங் ஆசிய கோப்பையையும் வென்று சாதனை படைத்தது. ஆட்டநாயகன் விருதை அல்லா கசன்ஃபர் (Allah Ghazanfar) பெற்றார். மேலும், தொடர் நாயகன் விருதை செதிக்குல்லா அடல் (Sediqullah Atal) வென்றார்.
ஆப்கானிஸ்தான் அணி எமர்ஜிங் டி20 ஆசிய கோப்பையை வென்று அசத்தல்:
Historic moment for the Afghan boys. Deserving champions of the Emerging Asia Cup. A proud moment for the entire nation. May this be the first of many more. 🏆 #Afghanistan #EmergingAsiaCup #Champions #AfghanAbdalyan #SediquallahAtalpic.twitter.com/xOZ37gpRcF
— Cricket Afghanistan (@AFG_Sports) October 27, 2024