BAN Vs HKG 3rd Match (Photo Credit: @Bjsports_OFC X | @GulfNewsSport X)

செப்டம்பர் 10, அபுதாபி (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 தொடர், நேற்று (செப்டம்பர் 09) முதல் தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. 2025 ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை, சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், சோனி லிவ் ஓடிடி தளத்திலும் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. IND Vs UAE, Toss: 2வது லீக் போட்டி.. யுஏஇ அணிக்கு எதிராக இந்தியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

வங்கதேசம் எதிர் ஹாங்காங் (Bangladesh Vs Hong Kong):

இந்நிலையில், 3வது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேசம் - ஹாங்காங் (BAN Vs HKG) அணிகள் நாளை (செப்டம்பர் 11) மோதுகின்றன. இப்போட்டி, அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும். லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி, யாசிம் முர்தாசா தலைமையிலான ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஹாங்காங் அணி வெற்றி பெற்றுள்ளது.

வங்கதேச அணி வீரர்கள்:

லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமோன், சைஃப் ஹசன், தௌஹித் ஹ்ரிடோய், ஜேக்கர் அலி, ஷமிம் ஹொசைன், நூருல் ஹசன் சோஹன், மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஷைஃப் உதீன்.

ஹாங்காங் அணி வீரர்கள்:

ஜீஷன் அலி, பாபர் ஹயாத், நிஜாகத் கான், அன்ஷுமன் ராத், மார்ட்டின் கோட்ஸி, யாசிம் முர்தாசா (கேப்டன்), அய்சாஸ் கான், நஸ்ருல்லா ராணா, எஹ்சான் கான், அலி ஹாசன், அதீக் இக்பால், கல்ஹான் சல்லு, ஆயுஷ் சுக்லா, கிஞ்சித் ஷா, மொஹமத் வஹீத், ஷாஹித் வாசிஃப், முகமது கசன்பர்.