IND Vs BAN Batting First (Photo Credit: @cricbuzz X)

செப்டம்பர் 24, துபாய் (Sports News): 2025 ஆசிய கோப்பை (Asia Cup 2025) டி20 தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின், லீக் சுற்று போட்டிகள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுன. இதில், முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடும். இத்தொடர், சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. IND Vs BAN, Toss: வங்கதேசம் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு.. காயத்தால் லிட்டன் தாஸ் விலகல்..!

இந்தியா எதிர் வங்கதேசம் (India Vs Bangladesh):

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 24) சூப்பர் 4 சுற்றில் 16வது போட்டியில், இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஜேக்கர் அலி தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஜேக்கர் அலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்தியா அதிரடி:

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 37 பந்தில் 75 ரன்கள் (6 பவுண்டரி, 5 சிக்ஸர்) அடித்து ரன் அவுட்டாகினார். மறுபுறம், ஹர்திக் பாண்டியா 38 ரன்கள் அடித்தார். வங்கதேச அணி சார்பில் ரிஷாத் ஹொசைன் 2, டான்சிம் ஹசன் சாகிப், முஸ்தாபிசுர் ரஹ்மான், முகமது சைபுதீன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். வங்கதேச அணி வெற்றி பெற 169 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்கள்:

அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

வங்கதேச அணி வீரர்கள்:

சைஃப் ஹாசன், தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமன், தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், ஜேக்கர் அலி (கேப்டன்), முகமது சைபுதீன், ரிஷாத் ஹொசைன், டான்சிம் ஹசன் சாகிப், நாசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்.