செப்டம்பர் 18, அபுதாபி (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டி, செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெறும். இத்தொடரை, சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் பார்க்கலாம். மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், ஏற்கனவே குரூப் ஏ பிரிவில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. யுஏஇ, ஓமன் அணிகள் எலிமினேட் ஆகியுள்ளது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 18) 11வது லீக் போட்டியில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. PAK Vs UAE: வேகத்தில் மிரட்டிய ஜுனைத் சித்திக்.. யுஏஇ வெற்றி பெற 147 ரன்கள் இலக்கு..!
இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் (Sri Lanka Vs Afghanistan):
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இப்போட்டி, அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. குரூப் பி பிரிவில், ஹாங்காங் அணி எலிமினேட் ஆகியுள்ள நிலையில், மீதமிருக்கும் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே, இன்றைய போட்டியில் மோதும் இரு அணிகளும் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற முயற்சிக்கும். ஆப்கானிஸ்தான் அணி கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. மறுபுறம், இலங்கை அணி தோல்வியடைந்தால் கூட ரன்ரேட் அடிப்படையில் தகுதிபெற வாய்ப்புள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 8 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இலங்கை அணி 5 போட்டிகளிலும், ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இலங்கை அணி வீரர்கள்:
பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், கமில் மிஷார, குசல் பெரேரா, தசுன் ஷனக, சரித் அசலங்கா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, நுவன் துஷார, நுவனிது பெர்னாண்டோ, ஜனித் லியனகே, துனித் வெல்லலகே, சாமிக்க கருணாரத்ன, பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரன.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:
செடிகுல்லா அடல், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், குல்பாடின் நைப், முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், கரீம் ஜனத், ரஷீத் கான் (கேப்டன்), நூர் அஹ்மத், அல்லா கசன்ஃபர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, ஃபரீத் அஹ்மத் மாலிக், அப்துல்லா அஹ்மத்ஸாய், முகமது இஷாக், முஜீப் உர் ரஹ்மான், தர்வீஷ் ரசூலி, ஷரபுதீன் அஷ்ரஃப்.