செப்டம்பர் 15, துபாய் (Sports News): 2025 ஆசிய கோப்பை (Asia Cup 2025) டி20 கிரிக்கெட் தொடர், செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில், மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன. இத்தொடர், சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. UAE Vs OMA: யுஏஇ அணி அதிரடி பேட்டிங்.. ஓமன் வெற்றி பெற 173 ரன்கள் இலக்கு..!
இலங்கை எதிர் ஹாங்காங் (Sri Lanka Vs Hong Kong):
இந்நிலையில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை - ஹாங்காங் அணிகள் மோதும் 8வது லீக் போட்டி, இன்று (செப்டம்பர் 15) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில், சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி, யாசிம் முர்தாசா தலைமையிலான ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இலங்கை அணி வீரர்கள்:
பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், கமில் மிஷார, குசல் பெரேரா, சரித் அசலங்கா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, நுவன் துஷார.
ஹாங்காங் அணி வீரர்கள்:
ஜீஷன் அலி, அன்ஷுமன் ராத், பாபர் ஹயாத், நிஜாகத் கான், ஷாஹித் வாசிஃப், கிஞ்சித் ஷா, யாசிம் முர்தாசா (கேப்டன்), அய்சாஸ் கான், ஆயுஷ் சுக்லா, எஹ்சான் கான், அதீக் இக்பால்.