AUS Vs IND 2nd Test Day 1 (Photo Credit: @cricbuzz X)

டிசம்பர் 06, அடிலெய்டு (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 16-வது பார்டர் கவாஸ்கர் கோப்பை (Border Gavaskar Trophy 2024) தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு (AUS Vs IND 2nd Test, Day 1) சுற்றுப்பயணம் செய்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், 2வது டெஸ்ட் அடிலெய்டில் (Adelaide) பகலிரவு (Day-Night Test) போட்டியாக இன்று (டிசம்பர் 06) தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. IND Vs AUS 2nd Test: அடிலெய்டு பகலிரவு டெஸ்ட் போட்டி; மிட்செல் ஸ்டார்க் அபார பந்துவீச்சு.. இந்தியா சொதப்பல் ஆட்டம்..!

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டத்தின் முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். பின்னர், கேஎல் ராகுல் - சுப்மன் கில் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேகரித்தனர். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் 69 ரன்கள் குவித்திருந்த நிலையில், கேஎல் ராகுல் (KL Rahul) 37 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த விராட் கோலி 7 ரன்னிலும், சுப்மன் கில் 31 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். இறுதியில் அதிரடி நிதிஷ் ரெட்டி (Nitish Kumar Reddy) அதிரடியாக விளையாடி, 42 ரன்களில் அவுட்டானார். இந்தியா முதல் இன்னிங்ஸில் 44.1 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 33 ஓவர்கள் விளையாடி 1 விக்கெட்டை இழந்து 86 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக நாதன் மேக்ஸ்வீனி 38, மார்னஸ் 20 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்னும் 94 ரன்கள் பின்தங்கிய நிலையில், ஆஸ்திரேலியா இன்னிங்ஸை நாளை தொடங்கும்.

பும்ரா அபாரம்: