
பிப்ரவரி 08, கான்பெரா (Sports News): ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பேட் கம்மின்ஸ் - பெக்கி தம்பதியினருக்கு (Pat Cummins - Becky Boston) பெண் குழந்தை பிறந்துள்ளது. நடைபெற்று முடிந்த பார்டர் - கவாஸ்கர் தொடரில் கோப்பையை வென்ற கேப்டன் பேட் கம்மின்ஸ், தனது மனைவி கர்ப்பமாக இருப்பதால் இலங்கை டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. பின்னர், காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதனால், இலங்கை தொடருக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். IND Vs ENG 2nd ODI: இந்தியா - இங்கிலாந்து இரண்டாவது ஒருநாள் போட்டி எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
இன்ஸ்டா பதிவு:
இந்நிலையில், பேட் கம்மின்ஸ் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து, "எங்களுடைய அழகான பெண் குழந்தை எடித், நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாகவும், காதலுடனும் இருக்கிறோம் என்று என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடிவில்லை" என பதிவிட்டுள்ளார்.
நெகிழ்ச்சி பதிவு வெளியிட்ட பேட் கம்மின்ஸ் மனைவி பெக்கி:
View this post on Instagram