செப்டம்பர் 01, சில்ஹெட் (Sports News): நெதர்லாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதலாவது டி20 போட்டியில், வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், வங்கதேசம் - நெதர்லாந்து (BAN Vs NED) அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, இன்று (செப்டம்பர் 01) சில்ஹெட் மைதானத்தில் நடைபெறுகிறது. BAN Vs NED 2nd T20I, Toss: நெதர்லாந்துக்கு எதிரான 2வது டி20.. வங்கதேச அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
வங்கதேசம் எதிர் நெதர்லாந்து (Bangladesh Vs Netherlands):
லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 டி20ஐ போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், வங்கதேச அணி 4 போட்டிகளிலும், நெதர்லாந்து அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
வங்கதேசம் அபார பவுலிங்:
அதன்படி, முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணி வங்கதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 17.3 ஓவர்களிலேயே 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆர்யன் தத் 30 ரன்கள், விக்ரம்ஜித் சிங் 24 ரன்கள் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். வங்கதேச அணி சார்பில் நசும் அகமது 3, தஸ்கின் அகமது மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 2, மஹேதி ஹசன் மற்றும் தன்சிம் ஹசன் சாகிப் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
வங்கதேசம் அணி வீரர்கள்:
பர்வேஸ் ஹொசைன் எமோன், தன்சித் ஹசன் தமீம், லிட்டன் தாஸ் (கேப்டன்), சைஃப் ஹாசன், தவ்ஹித் ஹிரிடோய், ஜேக்கர் அலி, மஹேதி ஹசன், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்.
நெதர்லாந்து அணி வீரர்கள்:
மேக்ஸ் ஓடோவ்ட், விக்ரம்ஜித் சிங், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), ஷாரிஸ் அகமது, நோவா குரோஸ், கைல் க்ளீன், சிக்கந்தர் சுல்பிகார், ஆர்யன் தத், பால் வான் மீகெரென், டேனியல் டோரம்.