மே 03, ஐதராபாத் (Sports News): ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்று முடிந்த 50-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் (SRH Vs RR) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஐதராபாத் அணி முதலில் களமிறங்கி அதிரடியாக விளையாடி இருபது ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 201 ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் அடித்தார். Workers Beaten by Employer: தொழிலாளிகளை சாட்டையால் அடித்து துன்புறுத்திய முதலாளி.. தொழிலாளர் தின கொண்டாட்டம் முடிவதற்குள் பரபரப்பு; அதிர்ச்சி காட்சிகள் லீக்.!
பின்னர், 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. முதல் ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் தனது 2-வது பந்தில் ஜாஸ் பட்லரை அவுட் ஆக்கினார். அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி கேப்டன் சாம்சன் முதல் 2 பந்துகளில் தடுமாறிய நிலையில், ஓவரின் 5-வது பந்தில் புவனேஷ்வர் குமாரின் சிறப்பான இன்ஸ்சுவிங் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். முதல் ஓவரிலேயே 1 ரன்னுக்கு 2 விக்கெட்களை பறிகொடுத்தது.
இதனையடுத்து, விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் கடைசி ஒரு பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி பந்தை வீசிய புவனேஷ்வர் குமார் ரோமன் பவுலை எல்.பி.டபிள்யூ (LBW) எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும், சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து ஆட்டத்தில் முக்கியமான 3 விக்கெட்களை வீழ்த்திய புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகன் விருதை பெற்று சென்றார்.
Vintage Bhuvneshwar Kumar 😍
A perfect inswinger to the #RR skipper as he strikes twice in the first over 🎯👌
Watch the match LIVE on @StarSportsIndia and @JioCinema 💻📱#TATAIPL | #SRHvRR | @SunRisers pic.twitter.com/cGcOprREFT
— IndianPremierLeague (@IPL) May 2, 2024