செப்டம்பர் 25, செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் (Sports News): ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் (Australia Tour Of England 2024) மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி (ENG Vs AUS 3rd ODI) நேற்று (செப்டம்பர் 24) செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் (Chester-le-Street) நகரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 77, ஸ்மித் 60, ஆரோன் ஹார்டி 44, கிரீன் 42 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Shooting Competition: தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி.. தங்கம் வென்ற நெல்லை அரசுப் பள்ளி மாணவன்..!
பின்னர், 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பிலிப் சால்ட் ரன் ஏதும் எடுக்காமலும், பென் டக்கெட் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த சமயத்தில் வில் ஜேக்ஸ்-ஹாரி புரூக் இணைந்து 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வில் ஜேக்ஸ் 84 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து வந்த ஜேமி ஸ்மித் 7 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் கேப்டன் ஹாரி புரூக் (Harry Brook) ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதில், 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 94 பந்துகளில் 110 ரன்கள் அடித்தார். மேலும், லிவிங்ஸ்டன் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து அணி, 37.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால், டிஎல்எஸ் முறைப்படி (DLS Method) இங்கிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து 1-2 என்ற கணக்கில் உள்ளது. ஆட்டநாயகன் விருதை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பெற்று சென்றார்.
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா 3-வது ஒருநாள் போட்டி:
Full Match Highlights of 3rd ODI's between England and Australia.#ENGvsAUS #EnglandCricket pic.twitter.com/4Fy0zJeh94
— THIRD MAN 👨⚖️ (@cricupdatesonX) September 25, 2024