மே 22, அகமதாபாத் (Cricket News): 2024 ஐபிஎல் சீசன் (IPL 2024) தொடர் தனது இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. புள்ளிப்பட்டியலின்படி முதல் தகுதி சுற்றில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (SRH Vs KKR) அணிகள் குஜராத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து தங்களுக்கு இடையே பலப்பரிட்சை நடத்தியது. அணியில் இன்று ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் (Rajasthan Vs Bangalore Eliminator Match 2024) அணிகள் மோதிக்கொள்ளும் எலிமினேட்டர் சுற்று அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து, அதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதி சுற்றில் ஹைதராபாத் அணியுடன் மோதி, அதில் வெற்றி அடையும் அணி இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதும்.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இதற்கான பயிற்சி ஆட்டம் (Practice Session) அகமதாபாத் குஜராத் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை பெங்களூரு அணி நேற்று ரத்து செய்தது. மேலும், செய்தியாளர் சந்திப்பையும் ரத்து செய்தது. நேற்று இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, ஆர்சிபி அணியின் பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. Cyclone Alert: இந்தியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு எச்சரிக்கை..!
"விராட் கோலி அகமதாபாத்திற்கு வந்த பிறகு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதைப் பற்றி அறிந்தார். அவர் ஒரு தேசிய பொக்கிஷம், அவருடைய பாதுகாப்பு எங்கள் அதிகபட்ச முன்னுரிமை" என்று காவல் அதிகாரி விஜய் சிங்க ஜ்வாலா கூறினார். மேலும் அகமதாபாத்தில் உள்ள இரு அணி விடுதிகளுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.