ஜனவரி 15, இந்தூர் (Indore): இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் (IND vs AFG 2nd T20I) நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி இந்தூரில் துவங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக விளையாடிய இந்திய அணி, இந்த இலக்கை 15.4 ஓவர்களிலேயே எடுத்து வெற்றி பெற்றது. Dead Lizard In Wine: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.. மது பாட்டிலில் மிதந்த செத்த பல்லி..!
சிக்ஸர்களை பறக்கவிட்ட ஷிவம் துபே: அதிலும் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 68 (34), விராட் கோலி 29 (16), ஷிவம் துபே 63 (32) ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை காட்டினர், அதிலும் நேற்றைய போட்டியில் சிவம் துபே (Shivam Dube), முகமது நபிபத்தாவது ஓவரில், லாங் ஆன், கவ் கார்னர், மிட் ஆஃப் என மூன்று திசைகளில் மூன்று பந்துகளையும் சிக்ஸர்களுக்கு பறக்க விட்டு அசத்தினார். தற்போது இவருடைய ஒட்டுமொத்த பார்ம் மிகச் சிறப்பாக இருப்பதால் இவருக்கு இந்திய அணியில் அசைக்க முடியாத நிரந்திர இடம் கிடைக்கக்கூடும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.