மார்ச் 11, புதுடெல்லி (New Delhi): தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் ஆஸ்திரேலியா அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.- இதில் டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதிலும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது. இந்த தோல்வியின் காரணமாக நியூசிலாந்து அணி புள்ளிகளின் சதவீதப் பட்டியலில் (percentage of points) 75ல் இருந்து 60 புள்ளிகளாக சரிந்தது.
மேலும் அந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது 55 சதவீதப் புள்ளிகளில் இருந்து 59.09 சதவீதப் புள்ளிகளுக்கு முன்னேறியுது. இதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணி இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில், 5ல் வெற்றி, 2 தோல்விகள், ஒரு ட்ரா என மொத்தமாக 64.58 புள்ளிகளைப் (ICC World Test Championship) பெற்றது. Viral News: வீரகனுார் மயானக் கொள்ளை விழா.. ரத்தச் சோறு சாப்பிட்ட பெண்கள்..!
தொடர்ந்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் (IND Vs ENG Test Series) விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 68.51 சதவீத புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்து சத்தியுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய (AUSTRALIA) அணியானது 62.50 சதவீத புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.