Rahul Dravid (Photo Credit: Facebook)

பிப்ரவரி 05, பெங்களூரு (Sports News): ராகுல் டிராவிட்டையும், டெஸ்ட் கிரிக்கெட்டையும் பிரித்துப் பார்ப்பது மிகக் கடினம். அந்த அளவுக்கு டெஸ்டில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர்கள் பட்டியலில் இன்றுவரை இவர்தான் முதலிடத்தில் இருக்கிறார். ராகுல் டிராவிட் (Former Cricketer Rahul Dravid) பயிற்சியின் கீழ் இந்திய அணி அதே வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் 20 ஓவர் உலக கோப்பை வென்று வரலாறு படைத்தது. தற்போது ஐபிஎல் அணியின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். 38th National Games 2025: தேசிய விளையாட்டுப் போட்டிகள்.. தங்கம் வென்ற தமிழக வீரர்.!

டிரைவரிடம் சண்டை செய்த ராகுல் டிராவிட்:

இந்த நிலையில் பெங்களூரில் உள்ள கன்னிங்ஹாம் சாலையில், தனது SUV காரில் நேற்று மாலை ராகுல் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரின் பின்பகுதியில் சரக்கு ஆட்டோ ஒன்று வேகமாக மோதியது (Car Collides With Auto). இதில், அவரின் காரில் கீறல்கள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராகுல் டிராவிட், அந்த ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து, விபத்து குறித்து எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவரிடம் வாக்குவாதம் செய்த ராகுல் டிராவிட்: