மே 20, பெங்களூரு (Sports News): ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில் மும்பை – கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. அப்போது கொல்கத்தா அணி உடைமாற்றுக்கும் சென்ற ரோஹித் சர்மா (Rohit Sharma) அங்குள்ள வீரர்களுடன் மணி கணக்கில் அமர்ந்து பேசினார். மேலும் கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயரிடம் “நான் கட்டிய கோவிலில் ஒவ்வொன்றாக மாறுகிறது. எனவே இதுவே எனக்கு கடைசி” என்று பேசியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் பதிவானது. Terrace Gardening: மாடித்தோட்டம் ஈஸியா அமைக்கலாம்.. வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்..!
இதுதான் தற்போது ரோஹித் சர்மாவின் கோபத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது. இது குறித்து ரோஹித் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது உள்ள சூழலில் கிரிக்கெட் வீரர்கள் வாழ்க்கை மிகவும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. கிரிக்கெட் வீரர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும், பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கேமராக்கள் பின் தொடர்ந்து இருக்கின்றன. எங்களுக்கு தனிப்பட்ட முறையில் நண்பர்களுடன், சக வீரர்களுடன் பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கும். எனது உரையாடலை பதிவு செய்ய வேண்டாம் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கேட்டுக் கொண்ட போதிலும் அது ஒளிபரப்பப்பட்டது. இது தனியுரிமையை மீறுவதாகும். இதே முறை தொடர்ந்து நடந்தால் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆகிய மூன்றுக்கும் இருக்கும் நம்பிக்கை பாதிக்கப்படும். தயவு செய்து அறிவை பயன்படுத்துங்கள் என்று ரோகித் சர்மா காட்டமாக பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு வெளியிட்ட பிறகு, அந்த கிளிப் நீக்கப்பட்டது.