Water Canon Salute (Photo Credit: @sahiljoshii X)

ஜூலை 04, புதுடெல்லி (New Delhi): ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 (T20 WORLD CUP 2024) இறுதிப்போட்டியில், எய்டன் மார்க்கம் தலைமையிலான தென்னாபிரிக்க அணியை தோல்வியுறச்செய்துள்ள ரோகித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி, 11 ஆண்டுகளுக்கு பின்னர் ஐசிசி டி20 உலகக்கோப்பையை (India Vs South Africa IND Vs SA) கைப்பற்றி அசத்தி இருக்கிறது.

அந்த போட்டியில் 176 ரன்கள் இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்கா அணி, விக்கெட்கள் விழுந்தாலும் கிளாசன் அதிரடியால், கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் என்ற நிலைக்கு வந்தது. ஆனால் தொடர்ந்து விக்கெட் விழ ஆரம்பித்தது. அந்த அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த டேவிட் மில்லர் கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று எல்லை கோட்டில் சூர்யகுமார் யாதவ் கேட்ச்சில் அவுட் ஆனதைத் தொடர்ந்து 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்திய அணி வருகை: இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸில் இருந்து இந்தியா அணி தாயகம் திரும்பவதாக இருந்தது. அந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான ‘பெரில்’ புயல் தீவிரமடைய, இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. புயல் கரையை கடந்ததை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பார்படாசில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பினர். இந்த விமானம் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது. Team India T20 World Cup Victory Parade: உலகமே வியக்கும் பிரமாண்ட பேரணி.. கையில் கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள் அணிவகுப்பு..!

மும்பை வருகை: இந்நிலையில் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் மோடியை (PM Modi) இன்று காலை சந்தித்துள்ளனர். டெல்லி ஐடிசி மவுரியா ஹோட்டலில் இருந்து பேருந்தில் பிரதமர் இல்லத்திற்கு சென்று வாழ்த்து பெற்றனர். இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மும்பை சென்றனர். மும்பையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வந்த விமானத்திற்கு, மும்பை விமான நிலையத்தில் நீர் வணக்கம் (Water Canon Salute) செய்யப்பட்டது. தற்போது அது தொடர்பான வீடியோக்கள் இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.

பிரமாண்ட பேரணி: மும்பையில் மரைன் டிரைவ் முதல் வான்கடே ஸ்டேடியம் வரையில் சுமார் 2 கிலோ மீட்டருக்கு திறந்தவெளி பேருந்தில் டி20 உலகக் கோப்பை டிராபியோடு ஊர்வலமாக செல்கின்றனர். அந்த பிரமாண்ட பேரணியானது (Victory Parade) தற்போது கோலாகலமாக தொடங்கியது. பேரணிக்காக பல மக்கள் அங்கு கூடியுள்ளனர். மேலும் வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என்றும், முதலில் வருபவர்கள் என்ற அடிப்படையில் அனுமதி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு பாராட்டு விழா நடக்கும் வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் திரளாக குவிந்துள்ளார்கள்.