
ஜூலை 03, பிர்மிங்ஹாம் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. லீட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று (ஜூலை 02) இங்கிலாந்து - இந்தியா அணிகள் (ENG Vs IND 2nd Test) மோதும் 2வது டெஸ்ட் போட்டி பிர்மிங்ஹாமில் நடைபெறுகிறது. ENG Vs IND 2nd Test, Day 2: இந்தியா 564 ரன்கள் குவிப்பு.. கேப்டன் கில் நிலையான ஆட்டம்..!
இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):
இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் கேஎல் ராகுல் 26 பந்துகளில் 2 ரன்கள் அடித்து அவுட்டானார். நிதானமாக விளையாடி வந்த கருண் நாயர் 31 ரன்னில் நடையை கட்டினார். ஜெய்ஸ்வால் 87 ரன்னிலும், ரிஷப் பந்த் 25 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அடுத்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி 1 ரன்னில் அவுட்டாகினார். நிதானமாக விளையாடி கேப்டன் கில் சதமடித்து (216 பந்துகள் 114* ரன்கள்), ஜடேஜா 41* ரன்களுடன் களத்தில் உள்ளனர். முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்களை இழந்து 310 ரன்கள் அடித்தது.
இந்தியா அபாரம்:
இந்நிலையில், 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா அரைசதம் (89 ரன்கள்) அடித்து அவுட்டானார். 6வது விக்கெட்டுக்கு கில் - ஜடேஜா இணை 203 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. தொடர்ந்து, கேப்டன் கில் நிலைத்து நின்று இரட்டை சதமடித்து (269 ரன்கள்) அசத்தினார். மறுபுறம், வாசிங்டன் சுந்தர் தன் பங்கிற்கு 42 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்தியா முதல் இன்னிங்ஸில் 151 ஓவர்களில் 587 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 77 ரன்கள் அடித்துள்ளது. ஹரி புரூக் 30* ரன்கள், ஜோ ரூட் 18* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.