ENG Vs IND 2nd Test, Toss (Photo Credit: @mykhelcom X)

ஜூலை 02, பிர்மிங்ஹாம் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. லீட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று (ஜூலை 02) இங்கிலாந்து - இந்தியா அணிகள் (ENG Vs IND 2nd Test) மோதும் 2வது டெஸ்ட் போட்டி பிர்மிங்ஹாமில் நடைபெறுகிறது. DD Vs TGC Eliminator: திண்டுக்கல் - திருச்சி அணிகள் இன்று மோதல்.. வெற்றி பெறப்போவது யார்..?

இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 137 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இந்தியா 35 முறையும், இங்கிலாந்து 52 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 50 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்தியா அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறவில்லை. இங்கிலாந்து அணி எந்தவித மாற்றமின்றி களமிறங்குகிறது.

இங்கிலாந்து (பிளேயிங் லெவன்):

ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், சோயிப் பஷீர்.

இந்தியா (பிளேயிங் லெவன்):

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், கருண் நாயர், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாசிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.