ஜூலை 11, லண்டன் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடர், ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில், 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 10) இங்கிலாந்து - இந்தியா அணிகள் (ENG Vs IND 3rd Test) மோதும் 3வது டெஸ்ட் போட்டி, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. ENG Vs IND 3rd Test, Day 1: ஜோ ரூட் 99 நாட் அவுட்.. முதல் நாளில் இங்கிலாந்து நிதானம்..!
இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):
இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலி 18, பென் டக்கெட் 23 ரன்னிலும் நிதிஷ் குமார் ரெட்டியின் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்தனர். இதனையடுத்து, ஓலி போப் - ஜோ ரூட் இணை நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அப்போது, ஓலி போப் 44 ரன்னில் ஜடேஜா சுழலில் சிக்கினார். அடுத்து வந்த ஹரி புரூக் 11 ரன்னில் பும்ரா பந்தில் போல்ட் ஆனார். முதல் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 83 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 251 ரன்கள் அடித்தது. ஜோ ரூட் 99* ரன்கள், கேப்டன் ஸ்டோக்ஸ் 39* ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
ஜோ ரூட் சதம்:
இதனையடுத்து, இன்று 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. பென் ஸ்டோக்ஸ் 44 ரன்னில் அவுட்டானார். அடுத்து, அபாரமாக விளையாடி சதமடித்த ஜோ ரூட் 104 ரன்னில் பும்ரா பந்தில் கிளீன் போல்ட் ஆனார். அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் டக் அவுட்டாகி வெளியேறினார். 88 ஓவர்களில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்களை இழந்து 271 ரன்கள் அடித்துள்ளது. ஜெமி ஸ்மித் 10* ரன்னிலும், கார்ஸ் விளையாடி வருகின்றனர்.
இங்கிலாந்து (பிளேயிங் லெவன்):
ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர்.
இந்தியா (பிளேயிங் லெவன்):
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், கருண் நாயர், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.