நவம்பர் 15, செயின்ட் லூசியா (Sports News): வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், 3வது டி20 போட்டி (WI Vs ENG) இந்திய நேரப்படி இன்று (நவம்பர் 15) அதிகாலை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. AUS Vs PAK 1st T20I: 7 ஓவரில் 93 ரன்.. அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா.., பாகிஸ்தான் படுதோல்வி..!
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பவல் (Rovman Powell) 54 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சாகிப் மஹ்மூத் (Saqib Mahmood), ஜேமி ஓவர்டன் (Jamie Overton) தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து, 146 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 149 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஆல் ரவுண்டர் சாம் கரன் (Sam Curran) 41, லியாம் லிவிங்ஸ்டன் (Liam Livingstone) 39 ரன்கள் அடித்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை சாகிப் மஹ்மூத் பெற்று சென்றார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி நாளை (நவம்பர் 16) நடைபெறுகிறது.
சாகிப் மஹ்மூத் அபார பந்துவீச்சு:
Saqib Mahmood has another in the powerplay! 💪
He now has six powerplay wickets in this series already 😳
Watch #WIvENG on @tntsports & @discoveryplusUK 📺 pic.twitter.com/aOjk3FHYxK
— Cricket on TNT Sports (@cricketontnt) November 14, 2024