ஜூலை 16, அமெரிக்கா (Sports News): கோபா அமெரிக்க கால்பந்து தொடர் (Copa America) அமெரிக்காவில் கடந்த மாதம் 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா-கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த இறுதி போட்டியில் 1-0 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் 16 ஆவது முறையாக கோபா அமெரிக்கா பட்டத்தை அர்ஜென்டினா வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு இந்திய மதிப்பில் 601 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது. TN Weather Update: வீசப்போகும் சூறாவளி.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
கண் கலங்கிய மெஸ்ஸி: இந்த நிலையில் போட்டியின் நடுவே இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் பெரும் பதற்றமாக ஆட்டம் சென்றுகொண்டிருந்தது. அப்போது காயம் காரணமாக மெஸ்ஸிக்கு பதிலாக நிக்கோலஸ் கோன்சாலஸ் களமிறங்கினார். தன்னால் கோல் அடிக்க முடியாமல் வலி காரணமாக மைதானத்திலிருந்து திரும்பியது நினைத்து அவர் கதறி அழத் தொடங்கினார். அவர் அழும் காட்சிகள் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
Messi crying !💔💔💔💔💔 pic.twitter.com/E4udPN8pyz
— Messi Media (@LeoMessiMedia) July 15, 2024