ஜனவரி 20, மெல்போர்ன் (Sports News): ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் டி20 (Big Bash League) தொடரில் நேற்று (ஜனவரி 19) நடைபெற்ற 40வது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. மெல்போர்ன் (Melbourne) கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் பியூ வெப்ஸ்டர் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினர். இதன்மூலம், இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை அடித்தது. இதில் அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 76 ரன்களையும், பியூ வெப்ஸ்டர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்களையும் சேர்த்தனர். ICC CT2025 India Squad: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025; ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு..!
மேக்ஸ்வெல் சாதனை:
இதனையடுத்து களமிறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்ற கிளென் மேக்ஸ்வெல், புதிய சாதனை ஒன்றையும் பதிவுசெய்தார். அதன்படி, இப்போட்டியில் மேக்ஸ்வெல் 6 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் ரோஹித் சர்மாவை (Rohit Sharma) பின்னுக்கு தள்ளி 7வது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாகவே ரோஹித் சர்மா 448 போட்டிகளில் 525 சிக்ஸர்களை விளாசி 7வது இடத்தில் இருந்தார். தற்போது, கிளென் மேக்ஸ்வெல் 458 போட்டிகளில் விளையாடி 430 இன்னிங்ஸ்களில் 528 சிக்ஸர்களை அடித்து அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:
கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) - 1056 சிக்ஸர்
கீரன் பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்) - 901 சிக்ஸர்
ஆண்ட்ரே ரஸல் (வெஸ்ட் இண்டீஸ்) - 729 சிக்ஸர்
நிக்கோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்) - 593 சிக்ஸர்