டிசம்பர் 21, கேப் டவுன் (Sports News): தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி (South Africa Vs Pakistan 2nd ODI) டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், நடைபெற்று முடிந்த 2வது ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றிச் கிளாஸன் (Heinrich Klaasen) அதிகபட்சமாக 74 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர் என 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து இருந்தார். Rey Misterio Sr Passed Away: புகழ்பெற்ற மல்யுத்த வீரர் சீனியர் ரே மிஸ்டீரியோ மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
கிளாசனுக்கு அபராதம்:
கிளாசன் ஆட்டமிழக்கும்போது தான் சதம் அடிக்காமல் போனதாலும், அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்ல முடியவில்லை என்ற விரக்தியில், ஸ்டம்பை காலால் எட்டி உதைத்து விட்டு சென்றார். ஐசிசி விதிமுறைப்படி மைதானத்தில் உள்ள எந்த ஒரு பொருளையும் சேதப்படுத்துவது குற்றமாகும். இதனால், ஐசிசி (ICC) அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீத அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியையும் வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.