அக்டோபர் 07, கவுகாத்தி (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 (ICC Women's Cricket World Cup 2025) கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஸ்ரீலங்கா ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் இந்த தொடர் 02 நவம்பர் 2025ல் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 07) இங்கிலாந்து மகளிர் அணி - வங்கதேச மகளிர் அணிகள் மோதின. India Women Vs South Africa Women: இந்தியா - தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி.. முழு விபரம் உள்ளே.!
இங்கிலாந்து மகளிர் எதிர் வங்கதேச மகளிர் அணிகள் (England Women Vs Bangladesh Women):
இப்போட்டி, மதியம் 3 மணிக்கு அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி பரஸ்பரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச மகளிர் அணி 49.4 ஓவர்களில் 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சோபனா மோஸ்டரி 60 ரன்கள், ரபேயா கான் 43 ரன்கள் மற்றும் ஷர்மின் அக்தர் 30 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து மகளிர் அணி சார்பில் சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்கள், லின்சி ஸ்மித், ஆலிஸ் கேப்சி, சார்லி டீன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், லாரன் பெல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி:
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி 46.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 182 ரன்கள் அடித்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹீதர் நைட் 79* ரன்கள், கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் 32 ரன்கள் அடித்தனர். வங்கதேச மகளிர் அணி சார்பில் அதிகபட்சமாக ஃபஹிமா காதுன் 10 ஓவர்களில் 2 ஓவர் மெய்டன், 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இங்கிலாந்து மகளிர் அணி:
டாமி பியூமண்ட், ஆமி ஜோன்ஸ், ஹீதர் நைட், நாட் ஸ்கைவர் பிரண்ட் (கேப்டன்), சோபியா டன்க்லி, எம்மா லாம்ப், ஆலிஸ் கேப்சி, சார்லி டீன், சோஃபி எக்லெஸ்டோன், லின்சி ஸ்மித், லாரன் பெல்.
வங்கதேச மகளிர் அணி:
ரூப்யா ஹைதர், ஷர்மின் அக்தர், நிகர் சுல்தானா ஜோட்டி (கேப்டன்), சோபனா மோஸ்டரி, ரிது மோனி, ஷோர்னா அக்டர், ஃபஹிமா காதுன், நஹிதா அக்டர், ரபேயா கான், மருபா அக்தர், நி அக்தர், ஷங்ஜிதா.