Sri Lanka Women Vs South Africa Women (Photo Credit: @ESPNcricinfo X)

அக்டோபர் 17, கொழும்பு (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கியது. இத்தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இத்தொடர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 17) இலங்கை மகளிர் அணி - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதிய 18வது லீக் போட்டி, இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெற்றது. SLW Vs RSAW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; மழையால் ஆட்டம் பாதிப்பு.. இலங்கை அணி 105 ரன்கள்..!

இலங்கை மகளிர் எதிர் தென்னாப்பிரிக்கா மகளிர் (Sri Lanka Women Vs South Africa Women):

இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். சுமார் 4 மணிநேரமாக பெய்த கனமழையால் போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 105 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக விஷ்மி குணரத்ன 34 ரன்கள் அடித்தார். தென்னாப்பிரிக்கா மகளிர் அணி சார்பில் நோன்குலுலேகோ மலாபா 3 விக்கெட்களை வீழ்த்தினார். டிஎல்எஸ் முறைப்படி, 20 ஓவர்களில் இலக்கு 121 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 14.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் லாரா வோல்வார்ட் 60* ரன்கள், டாஸ்மின் பிரிட்ஸ் 55* ரன்கள் அடித்தனர். இதன்மூலம், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று அசத்தியது.

இலங்கை மகளிர் அணி:

விஷ்மி குணரத்ன, சாமரி அத்தபத்து (கேப்டன்), ஹாசினி பெரேரா, ஹர்ஷிதா சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, பியூமி வத்சலா படல்கே, சுகந்திகா குமாரி, மல்கி மதரா, இனோகா ரணவீர.

தென்னாப்பிரிக்கா மகளிர் அணி:

லாரா வோல்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ், அன்னேரி டெர்க்சன், மரிசான் கேப், கராபோ மெசோ, க்ளோ ட்ரையன், நாடின் டி க்ளெர்க், நோண்டுமிசோ ஷாங்காஸ், மசபாடா கிளாஸ், நோன்குலுலேகோ மலாபா.