USA Vs WI Highlights (Photo Credit: @ESPNcricinfo X)

ஜூன் 22, பார்படாஸ் (Sports News): ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் (ICC T20 World Cup 2024) லீக் போட்டிகள் முடிந்து, இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 6-வது ஆட்டத்தில் அமெரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் (USA Vs WI) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய அமெரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து, 19.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. Kallakurichi Illicit Liquor: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண விவகாரம்; முன்னாள் எஸ்.பி விருப்ப பணிஓய்வு ஏன்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கம்.!

அமெரிக்கா அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டகாரர் கவுஸ் 29 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரசல் மற்றும் சேஸ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். பின்னர், 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக, சாய் ஹோப் 39 பந்துகளில் 82 ரன்கள் அடித்து, அதில் 8 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் ஆகும்.

இறுதியில் 10.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை ராஸ்டன் சேஸ் பெற்று சென்றார். அடுத்தடுத்து, இரண்டு தோல்விகளை சந்தித்த அமெரிக்கா அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.