ஜனவரி 23, ஈடன் கார்டன் (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இந்நிலையில், நேற்று (ஜனவரி 22) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் (Eden Gardens) மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிராக முதல் டி20 (IND Vs ENG 1st T20) போட்டியில், இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஒரு புதிய சாதனையைப் பதிவு செய்தார். இப்போடியில், சிறப்பாக பந்துவீசிய அவர், தனது 4 ஓவர்களில் 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்தின் ஜேக்கப் பெத்தேல் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். IND Vs ENG 1st T20i 2025: வெளுத்து வாங்கிய அபிஷேக்.. இங்கிலாந்து அணியை 13 ஓவரில் வென்ற இந்தியா.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ஹர்திக் பாண்டியா சாதனை:
இதில், இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில், இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் புவனேஷ்வர் குமார் (90 விக்கெட்கள்), ஜஸ்பிரித் பும்ரா (89 விக்கெட்கள்) ஆகியோரை பின்னுக்கு தள்ளி ஹர்திக் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது, ஹர்திக் பாண்டியா 110 போட்டிகளில் 91 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த பட்டியளில் முதலிடத்தில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 97 விக்கெட்கள், யுஸ்வேந்திர சஹால் 96 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
இந்தியா அபார வெற்றி:
இப்போட்டியில், இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர், இலக்கை துரத்தி விளையாடிய இந்திய அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது.