![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/05/47-380x214.jpg)
மே 29, குஜராத் (Sports News): டாடா ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம், இன்று குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.
நேற்றைய ஆட்டம் இடைவிடாத தொடர் மழையால் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இன்றைய ஆட்டம் குஜராத் அணியின் பேட்டிங் நிறைவு பெற்று, சென்னை அணி முதல் ஓவரில் 3 பந்துகளை எதிர்கொண்டதும் தொடங்கியது.
மழையின் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மழை எப்போது நிற்கும்? ஆட்டம் நடக்குமா? சூப்பர் ஓவர் வருமா? தோனி பேட்டிங் செய்வாரா? என்ற பல எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் எடுத்துள்ளது. 215 ரன்கள் எடுத்தால் சென்னைக்கு வெற்றி கிடைக்கும். மழையினால் போட்டியின் விதிப்படி இனி அனைத்தும் தீர்மானிக்கப்படும்.