செப்டம்பர் 03, ஹராரே (Sports News): இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது. ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20ஐ தொடரை பேன்கோட் செயலி மூலம் நேரலையில் பார்க்கலாம். இதில், நடந்து முடிந்த ஒருநாள் தொடரில், இலங்கை அணி 2-0 என ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து, ஜிம்பாப்வே - இலங்கை (ZIM Vs SL) அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி, இன்று (செப்டம்பர் 03) இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகியது. BAN Vs NED 3rd T20I, Toss: வங்கதேசத்திற்கு எதிரான 3வது டி20.. நெதர்லாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு.., ஆறுதல் வெற்றி பெறுமா..?
ஜிம்பாப்வே எதிர் இலங்கை (Zimbabwe Vs Sri Lanka):
சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி, சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 175 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பிரையன் பென்னட் 81 ரன்கள், கேப்டன் சிக்கந்தர் ராசா 28 ரன்கள் அடித்தனர். இலங்கை அணி சார்பில் துஷ்மந்த சமீர 3, மஹீஸ் தீக்ஷன, நுவன் துஷார மற்றும் துஷான் ஹேமந்த தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
ஜிம்பாப்வே அணி வீரர்கள்:
பிரையன் பென்னட், தடிவானாஷே மருமணி, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா (கேப்டன்), ரியான் பர்ல், டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, பிராட் எவன்ஸ், டினோடென்டா மபோசா, ரிச்சர்ட் நகரவா, பிளஸ்ஸிங் முசரபானி.
இலங்கை அணி வீரர்கள்:
பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, சரித் அசலங்கா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீர, மஹீஸ் தீக்ஷன, நுவன் துஷார.