ஜூலை 08, வெலிங்டன் (Sports News): நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (Zimbabwe Vs New Zealand) விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 30ஆம் தேதியும், 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 07ஆம் தேதியும் புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ZIM Vs SA 2nd Test, Day 2: பாலோ ஆன் பெற்றது ஜிம்பாப்வே.. தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு..!
நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு:
டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியில் அறிமுக வீரர் மேத்யூ ஃபிஷர் இடம் பிடித்துள்ளார். இவர், நியூசிலாந்தின் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி, 14 போட்டிகளில் 51 விக்கெட்டுகளை அசத்தியுள்ளார். அதே வேளையில், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மைக்கேல் பிரேஸ்வெல் தனிப்பட்ட காரணங்களால் இத்தொடரில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து, வேகப்பந்து வீச்சாளர்கள் கைல் ஜேமிசன், பென் சியர்ஸ் ஆகியோரும் இத்தொடரில் இருந்து விலகியுள்ளனர். சுழற் பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் மற்றும் ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். இதுதவிர அணியின் நட்சத்திர வீரர்கள் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர் க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
நியூசிலாந்து அணி வீரர்கள்:
டாம் லேதம் (கேப்டன்), டாம் ப்ளண்டெல், டெவான் கான்வே, ஜேக்கப் டஃபி, மேத்யூ ஃபிஷர், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், வில் ஓ'ரூர்க், அஜாஸ் படேல், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், நாதன் ஸ்மித், வில் யங்.